ச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ளளார்.
மீகிங் அவென்யூ மற்றும் டோனாரா டிரைவ் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் உடலின் மேற்பாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், உள்ளூர் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவராவது தேடப்படுவது குறித்த விபரங்கள் எவையும் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை.
மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தினால், சம்பவம் இடம்பெற்ற குறித்த அந்தப்பகுதி சுற்றுவட்டாரங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.