இன்று வரை சுமார் 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் வெடிகுண்டுகள் சத்தம் எதுவும் கேட்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த நிலையில், ராகுல் காந்தி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,புல்வாமா, பதன்கோட், உரி, கட்ச்ரோலி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரையில் 942 முறை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இதனை பிரதமர் செவிக்கொடுத்து கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.