பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடத்திற்கு அரசாங்க வாகனத்தை பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமையால் 4 வருட சிறைத்தண்டனையும் 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.