வங்கக் கடலில் உருவான இந்த ஃபானி புயல், கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதன்போது ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் செல்போன் கோபுரங்கள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியன சாய்ந்து விழுந்துள்ளன.
குறித்த அனர்த்தங்களில் சிக்கியே 34 பேரும் உயிரிழந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் சீரமைத்து வருகின்றனர்.
அந்தவகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் ஒரு இலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வும் ஒடிசா அரசு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநிலத்தில் ரயில், விமானம், தொலைத் தொடர்பு, குடிநீர் விநியோகம், மின் விநியோகம் உள்ளிட்ட சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருப்பதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.