ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அவதார’ திரைப்படம் உலகளவில் 2.78 பில்லியன் டொலர் வசூலை குவித்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
எனினும் இத்திரைப்படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் 2016ல் அறிவித்திருந்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும். 3D திரைப்படமாக உருவாக்கப்படும் ‘அவதார் 2’ மற்றும் அதன் இதர பாகங்களை 3D கண்ணாடியின்றிப் பார்க்கமுடியும்” என்க் கூறினார்.
‘அவதார் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் போன்றோர் இதில் நடிக்கின்றார்கள்.
‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அன்றும் அடுத்த மூன்று பாகங்கள் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதியும் அதேநேரம்
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதியும் அதேபோல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி போன்ற நாள்களில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘அவதார்’ படங்களின் வெளியீடுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
‘அவதார் 2’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி அன்று வெளியாகும் எனத் தற்போது டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல் ‘அவதார் 3’, ‘அவதார் 4’, ‘அவதார் 5’ திரைப்படங்களும் 2023, 2025, 2027 ஆகிய ஆண்டுகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெர்மினேட்டர் திரைப்படத்தின் இரு பாகங்கள், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற திரைப்படங்கள் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்த ஜேம்ஸ் கேம்ரூன் 3D கண்ணாடியின்றி 3D படம் பார்க்கமுடியும் என்று அறிவித்தது திரையுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.