170 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் 130 முதல் 170 வரையிலான பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என இத்தாலி செய்தியாளர் பிரான்சிஸ்கோ மரினோ கூறியுள்ளார்.
Stringer Asia இணையதளத்தில் பிரான்சிஸ்கா எழுதியுள்ள கட்டுரையில், “இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் 130 முதல் 170 வரையிலான பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் பெரும் சேதம் நேரிட்டுள்ளது. அதனை பாகிஸ்தான் மறைக்கிறது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதும், பாகிஸ்தான் இராணுவ மருத்துவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் சிலர் இறந்துள்ளனர் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கிறன. இந்த சம்பவம் பற்றி வெளியே தெரியக் கூடாது என்பதற்காக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசியதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் உயிரிழப்பு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின.
இந்த தாக்குதலில் எந்தவொரு பாதிப்பும் கிடையாது என பாகிஸ்தான் கூறியது. 200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என பா.ஜனதா கூறியது. இந்திய விமானப்படையினர், எங்களுடைய இலக்கை தாக்கினோமே தவிர எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எனத் தெரியாது என்றனர்.
இந்நிலையில் இந்திய விமானப்படையின் தாக்குதலில் 170 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என இத்தாலி செய்தியாளர் பிரான்சிஸ்கோ மரினோ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.