கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட அதிகளவிலான பொருட்களை மீட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கல்பிட்டி விஜயபாகு கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலின் போது, நீரினுள் வீசப்பட்டிருந்த 2 வாள்கள், 15 கத்திகள், 4 செல்போன்கள், 24 தோட்டாக்கள், 2 வாகன இலக்கத் தகடுகள், துப்பாக்கியின் பாகம் ஒன்று ,தூரக் நோக்கி ஒன்று, ரவுட்டர் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.
அதேபோன்று நேற்று மாலை இராணுவத்தின் உதவியுடன் துரங்குளி – கணமூலை வீதியின் மந்தமான்தீவு பாலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ஒரு கைத் துப்பாக்கி, வாள் ஒன்று, கத்தி 10, ரவுட்டர் இரண்டு, வாகன இலக்கத் தகடு ஒன்று உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.