வீசிய சூறாவளியில் 127 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
122 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சூறாவளியில் சிக்கி இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்தோடு, 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்