அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து விண்கலத்துக்கு ஏவவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“புயல் பாதிப்பு ஏற்படும்போது, அதனை தற்போது கணிக்க முடிந்துள்ளமையால் உயிர்ச்சேதம் உட்பட எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்துள்ளது.
இதேவேளை சந்திராயன்-2 விண்கலம் எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிக்குள் விண்ணில் ஏவப்படும்.
மேலும் இந்த விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறங்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளோம்.
அந்தவகையில் சந்திராயன்-2 விண்கலம் தரை இறங்கியவுடன் நிலவின் நிலப்பரப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன் ஊடாக கிடைக்கும் கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஆர்வமாக உள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் ஆண்டும் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ மையம் திட்டமிட்டுள்ளது.
இதன்போது சூரியனை பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்” என சிவன் தெரிவித்துள்ளார்.