விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில் இருந்து படையினரை முழுமையாக விலக்கும் கோரிக்கையை செயற்படுத்த முடியாது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.
இதேவேளை வடக்கில் முழுமையாக இராணுவத்தை விலக்குவது என்பது சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.