தற்போது இயக்குநர் மணிரத்னம் இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இப்படம் லைகாவின் மெகா பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் யார் யார் எந்த பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. விபரம் இதோ..
வந்தியத்தேவன் – கார்த்தி
குந்தவை – கீர்த்தி சுரேஷ்
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
அருள்மொழிவர்மன் – ஜெயம் ரவி
சுந்தர சோழர் – அமிதாப் பச்சன்
பெரிய பழுவேட்டரையர்- மோகன் பாபு
இதேவேளை, இந்த நாவலில் வானதி, ஆழ்வார்க்கடியான், அநிருத்த பிரம்மராயர், சின்ன பழுவேட்டரையர், செம்பியன் மாதவி, மதுராந்தக தேவர், வீரபாண்டியன், பார்த்திபேந்திர பல்லவன், மந்தாகினி, சேந்தன் அமுதன், ஊமை பெண், கந்தமாறன், மணிமேகலை, பூங்குழலி உட்பட மேலும் பல பாத்திரங்கள் உள்ளன. இந்த பாத்திரங்களுக்கு மணிரத்னம் யார் யாரைத் தெரிவு செய்யவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.