(ரெலோ) உயர்மட்டக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலையில் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
ஆயுதக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டனி அமைப்பது தொடர்பாக நிலைப்பாடு, தமிழரசுக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடு, ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் சிறிகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இச் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிப்புக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.