மேலும் வியாபார நிலையங்கள் அகற்றப்படுமாயின் மாற்றிடங்கள் வழங்கப்படுமென கூறிய முதல்வர், தற்போது மாற்று இடத்தை தர மறுப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து அங்காடி வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிடுகையில்,
“கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எமது சங்கத்தினரை அழைத்த யாழ்.முதல்வர், உங்களுக்கு இடம் ஒதுக்கி புதிய இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் கடைகளை விட்டு வெளியேறலாம் என கூறியிருந்தார்.
அதன்பின்னர், அண்மையில் போக்குவரத்துத் துறை அமைச்சர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட முதல்வர், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதும் அதன் மேலேவுள்ள தளத்தில் கடைகளை அமைப்பதற்கு தருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்.முதல்வர், இலங்கை போக்குவரத்து சபையினருடன் உடன்பாட்டை செய்ததாகவும் பேருந்து நிலைய வளவிலுள்ள வியாபார நிலையங்களை ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு அறிவித்தாகவும் எங்களுக்கு நேரடியாக குறிப்பிட்டார்.
மேலும் கடைகளை அப்புறப்படுத்தாவிட்டால் யாழ்.மாநகர சபை அப்புறப்படுத்துமென அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படுமாயின் 68 கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களது குடும்பங்கள் என 136 குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கு மாற்றுவழியின்றி துயரத்துக்குள் தள்ளப்படுவார்கள்
தமிழரின் விடிவுவென நினைத்து எமக்கு நல்லது செய்வார்களென எண்ணி, வாக்களித்த எங்களுக்கு தெரு வாழ்வுதான் இறுதியாக கிடைக்க போகின்றது.
ஆகையால் எமது நிலைமையை உணர்ந்து இதற்கு பொறுப்பான அரச அதிகாரிகள், தமிழ் அரசியர் தலைவர்கள் என அனைவரும் தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்” என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.