ஈராக்கின் சமகால நிலைமைகளையும், அரசியல் இரண்டக நிலைகளையும் எடுத்துக் காட்டும் விதமாக அவர்கள் நாடக திறன்களை வௌிகாட்டுகின்றனர்.
அத்துடன் குறைபாடுடையவர்களுக்கு எதிரான சமூகத்தின் எதிர்மறையான சிந்தனைகளை சுட்டிக்காட்டுவதாகவும் இவர்களின் மேடை நாடக கருப்பொருட்கள் அமைந்திருந்தன.
அலி அல்-ஷாய்பானி என்பவரின் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு, அவரின் வழிநடத்தலுக்கு அமைய ஓவர் ப்ரோவா என்ற அரங்க நாடக காட்சிகளை வௌிப்படுத்தினர்.
இதில் சில அங்கத்தவர்கள் கடந்த கால போர் சூழ்நிலையின் போது தங்களின் பார்வைகளை இழந்தவர்களாவர். அத்துடன் மேலும் சிலர் வெவ்வேறு விபத்து சம்பவங்களின் போதும், பிறப்பிலேயே பார்வையை இழந்தவர்களாக உள்ளனர்.
குறிப்பாக அலி ஹூசைன் என்ற கலைஞர் முன்னாள் பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டு வந்த நிலையில், வெடிக்கும் சாதனம் ஒன்றின் தாக்கத்தால் தனது பார்வையை இழந்தார். பின்னர் தனது நடிக்கும் திறமையை வௌிப்படுத்தி வருகின்றார்.
இந்த 13 கலைஞர்களும் பாபிலோன் பண்டிகை உட்பட பல முக்கிய நிகழ்ச்சிகளிலும், வெவ்வேறு நகரங்களிலும் தங்களின் ஆக்கங்களை வௌிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.