ரிழந்துள்ளார்.
கனடாவை சேர்ந்த 25 வயதான இளைஞர் தனது காதலி மற்றும் நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு இரண்டு மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட கம்பியில் தொங்கிக் கொண்டே செல்லும் சாகச விளையாட்டில் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இளைஞரின் உடலில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்து விழுந்ததில் 100 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
கீழே விழுந்த இடத்தில் முழுவதும் கற்கள் இருந்த நிலையில் அதில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.