அத்துடன், மனித உரிமை பேரவையின் பரிந்துரைக்கு இணை அனுசரணை வழங்குவதாக கைச்சாத்திட்டு, பின்னர் அதில் சில விடயங்களை நிராகரிப்பதானது நகைப்புக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “அமைச்சர் மங்கள சமரவீர இன்னும் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளில் தலையிட்டு வருகின்றார். வெளிநாட்டு நீதிபதிகள் எமது நீதிமன்றங்களில் அமர்வது பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கிறார்.
எனவே, ஜனாதிபதி அமைச்சர் மங்கள சமரவீரவின் நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எமது நாடு சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் நகைப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்” என அவர் குறிப்பிட்டார்.