இசைத்துறையின் இராஜேஸ்வரி நுண்கலை
மன்றத்தின் இசை விருந்து கிழக்குப்
பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் (05) நடைபெற்றது
கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி
விபுலானந்தா அழகியல் கற்கைகள்
நிறுவகத்தின் இசைத்துறை கலாநிதி தெ
பிரதீபன் ஒருங்கிணைப்பில் இசைத்துறை சிரேஷ்ட விரிவுரயுயாளர் கலாநிதி திருமதி
நிர்மலேஸ்வரி பிரஷாந்த் தலைமையில் இசைத்துறையின்
இராஜேஸ்வரி நுண்கலை மன்றத்தின் இசை விருந்து சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்
நிறுவகம் மட்டக்களப்பு கல்லடியில் இன்று பிற்பகல் நடைபெற்றது
இசைத்துறையின் இராஜேஸ்வரி நுண்கலை
மன்றத்தினால் இன்று இரண்டாவது முறையாக
நடாத்தப்பட்ட இசை விருந்து நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக கிழக்குப்
பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நான்காம் வருட இசைத்துறை மாணவன் க .லோவிகரன் மிருதங்கமும் , இரண்டாம் வருட இசைத்துறை
மாணவன் பா .லிங்கேஸ்வரன் ,,வயலின் மற்றும்
மாணவன் ஜெ . யுதிஸ்ரன் ஆகியோரோனால் இசை
விருந்து வழங்கப்பட்டது
இன்று நடைபெற்ற இரண்டாவது இசை விருந்து நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகம்
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளர்கள் ,மாணவர்கள்
கலந்துகொண்டனர்