இதையடுத்து, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களும், அவர்களின் சின்னங்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், தமிழ் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள், சின்னங்கள் அச்சிடப்பட்ட தாளை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி ஆரம்பமாகியது.
இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டும் பணியை ஆட்சியர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை தேர்தல் ஆணையம் அண்மையில் ஒதுக்கீடு செய்தது.