நியூயோர்க்கிலிருந்து கியூபெக் நோக்கி ஹமிங்ஃபோர்ட் எல்லையை கடக்க முற்பட்ட காரொன்றிலிருந்து நேற்று முன்தினம் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
ஹமிங்ஃபோர்ட் எல்லையில் காரை சோதித்த சுங்க அதிகாரிகளே காரில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் குறித்த நபர் இரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 87 வயதுடைய வயோதிபர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை கியூபெக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.