தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அவ்வகையில், ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை மேலதிகமாக 1487 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் நேர அட்டவணை முகாமையாளர் சஜிவ டிலுக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மேலதிக பேருந்து சேவை இடம்பெறவுள்ளதோடு, கொழும்பு, ஹட்டன், கண்டி, அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள் குறித்து கூடுதலான கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலும் பண்டிகை காலப்பகுதியில் விசேட பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கும் இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.