LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 2, 2019

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

வருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிரகறிவாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடை தாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் நடைபெறவுள்ளன.

இந்த வருடம் ஏனைய வருடங்களைவிட அதிகமான உல்லாச பிரயாணிகள் வருகை தருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை உல்லாச பிரயாணிகளாக வருபவர்கள் நுவரெலியாவின் இயற்கையையும் அதன் சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7