இன்று நடைபெற்ற வருடாந்த கல்லூரியின் பரிசளிப்பு
தின நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை
மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு.ம்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அதிதிகளினால்
பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
இதேவேளை பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா
.ஸ்ரீநேசன் பாடசாலை சமூகத்தினறினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்
இன்று நடைபெற்ற பரிசளிப்பு நிகழவில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு ஜெகதீஸ்வர
குருக்கள், பிரதம அதிதியாக
பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்
கே .ரகுகரன் ,கௌரவ அதிதிகளாக
ஓய்வுநிலை கோட்டக்கல்வி பணிப்பாளர்களான எ
.சுகுமாரன் , மற்றும் எ .அருள்பிரகாசம்
மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் ,
,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்
, பெற்றோர் , பாடசாலை அபிவிருத்தி குழு
உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்