அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரம் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படாலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிறைவேற்று அதிகாரம் யாப்பிலிருந்து முழுமையாக அகற்றப்படவில்லை என்பதை அனைவரும் கருத்திற்கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக நீக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக அமைவதுடன் ஜனாதிபதியின் அதிகாரம் அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
அந்த நிலைபாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. நிறைவேற்று அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் மாத்திரமே வினைத்திறன் மிக்க சகல சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு ஏற்ற ஆட்சியை உருவாக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.