நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அவமானப்படப்போகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது பலவீனத்தை அறிந்து எப்படியேனும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் ஆட்சி எல்லைக்காலம் குறித்தும், ஜனாதிபதித் தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்புகள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை எப்போது நிறைவுக்கு வருகின்றது என்ற கேள்வியை அவரது அணியினர் மூலமாக ஜனாதிபதி கேட்கின்றார்.
இந்தவிடயத்தில் மிகத் தெளிவாக தெரியும் அவரது ஐந்து ஆண்டுகால பதவிக்காலம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முடிவுக்கு வரவேண்டும்.
இதனிடையே, 19ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது ஜூன் மாதமாக இருந்தாலும் ஜனவரி மாதம் தொடக்கம் அவர் பதவியில் இருந்து வருகின்றார்.
ஒருவேளை 19 ஆம் திருத்த சட்டம் இந்த மாதமே நிறைவேற்ற முடிந்திருந்தால் இன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்