அண்மையில், வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் பௌத்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாடு தொடர்பாக தமிழ் தலைமைகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வாறே யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் வடக்கில் இடம்பெற்ற பௌத்த மாநாடு தவிர்க்கப்பட வேண்டிய விடயமென்றும் அவர் வலியுறுத்தினார்.
பௌத்த மதம் இந்து மதத்திலிருந்தே தோற்றம் பெற்றது. பௌத்த மதத்தை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் தற்போது பௌத்தம் என்றாலே சிங்களம் என்றாகிவிட்டது. அதனாலேயே வடக்கில் பௌத்த மாநாடு நடத்தப்பட்டமைக்கு பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.