LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 11, 2019

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப்பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது.

ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை தூக்கியதற்கான காரணங்கள் என்ன?

இது குறித்து பல முறைப்பாடுகள் ஆவா குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்குப் புறம்பாக கூறும் ஊடகங்களால் ஆவா குழு சமூக சீர்கேட்டாளர்களாகவே கூறப்பட்டு வருகின்றது.

எமது ஆவா அமைப்பானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் சமூக சீர்கேடுகளையும் அழிக்கும் அமைப்பாகவே நாம் இதை கட்டமைத்துள்ளோம்.

எமது அமைப்பின் 40 சதவீதமானோர் பல்கலைக்கழக மாணவர்களே. ஆகவே பல்கலைக்கழக பகிடிவதையினை தவிர்ப்பதற்கு ஆவா குழுவினால் Anti Ragging Committee உருவாக்கப்பட்டுள்ளது. மறைமுகமாகவோ நேரடியாகவோ பல தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருப்பது நீங்கள் அறிந்ததே.

அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய போதும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையும் நீங்கள் அறிந்ததே.

ஆகவே இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடற்பாகங்கள் ஈவு இரக்கமின்றி துண்டிக்கப்படும்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதையினை எமக்கு அறியத்தரலாம். அது பல விசாரணைகளின் பின்பு உண்மைத்தன்மை அறியப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7