ச்சியடைந்தமைக்கு யுத்தத்தால் ஏற்பட்ட வளங்களின் அழிவே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “இன்று எமது பிரதேசத்தின் கல்வி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக யுத்தத்தினை குறிப்பிடலாம். யுத்ததினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதேவேளை, பாடசாலை வளங்களும் இல்லாது அழிந்துள்ளன. இதன் காரணமாகவே கல்வியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நான் கூறுவேன். இன்று யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் உள்ளனர்.
அவர்களில் ஐந்து வீதமானோரே எமது மக்களுக்கு உதவிகளைச் செய்கின்றனர். இவர்கள் போன்று ஏனையோரும் உதவ முன்வந்தால் எமது பிரதேசங்களில் கல்வியை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும். 70ஆம், 76ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி எவ்வாறு இருந்ததோ அதேபோன்று முன்னிலையான நிலைக்கு கொண்டுசெல்ல முடியும்” என அவர் தெரிவித்தார்.