திண்டிவனத்தில் நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பணத்தை கொடுத்து அரசியல் செய்பவர்கள் மத்தியில் கருத்தை வைத்து அரசியல் செய்வது சிறந்ததொன்றாகும்.
மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோமென ஆளும் அரசு கூறி வருகின்றது. ஆனாலும் விவசாயிகள் இன்னும் கடனாளியாகவே உள்ளனர்.
அத்துடன் கல்வி, சாலை, மின்சாரம் ஆகியவை தனியார் மயமாக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் சொத்துக்களும் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க அரசு தவறிவிட்டது.
ஆனால், எமது கட்சி மக்களின் நலனை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படுகின்றது. ஆகையாலேயே நாங்கள், உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. மாறாக உங்களின் உரிமைக்காக போராடுகின்றோம்” என சீமான் தெரிவித்துள்ளார்