இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் எதிர்வரும் 12ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இவர்களுடன், RJ.பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டு இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம், இத்திரைப்படம் கடந்த வருடம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போனமை குறிப்பிடத்தக்கது.