சுமார் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாசிக்கத் தேவைப்படும் சுத்தமான காற்று, குடிநீர், கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் காடுகள் ஆகியவை குறைந்து வருவதே இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக நாளைய தினம் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 130 நாடுகள் கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.