றின் மாடியிலிருந்து குதித்து தமிழ் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான கருண்யா சிங்காரவேல் (31 வயது) என்பவரே நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் மனிதவள முகாமைத்துவப் பிரிவின் உதவி முகாமையாளராக இவர் செயற்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் பணிமுடிந்து தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறும் நேரத்தில் 9 ஆவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்துள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.