லிகதைகளை பா.ஜ.க உருவாக்கிவருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரித்தானிய குடியுரிமை பெற்றவரா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டில் நிலவும் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, கறுப்புபணம் குறித்து கேள்வியெழுப்பினால் அதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் பதிலில்லை. ஆகவே மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இதுபோன்ற போலிக் கதைகளை உருவாக்கி அரசு மூலம் பா.ஜ.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரித்தானியாவில் குடியுரிமை கொண்டுள்ளதாக பா.ஜ.கவின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.