அதேநேரம் ஜி.எஸ்.டி வரி வசூலில் மாநிலத்தின் பங்கை பெறுவதற்கு மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சை எடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.
கரூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது? ஜி.எஸ்.டி வரி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்திருக்கின்றது.
அதேபோன்று, இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை என்று அறிவித்திருக்கிறார்கள், அதே போதுமானதல்ல. குறைந்தபட்சம் 12,000 ரூபாய் வழங்கிட வேண்டும். தற்போது அறிவித்திருக்கக்கூடிய சலுகைகளை ஏன் 2012ஆம் ஆண்டில் அறிவிக்கவில்லை?” என்றார்.