தலாவாக்கலையில் 25 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
“2018 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
அதன்படி நுவரெலியா மாவட்டத்தின் பெறுபேறுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஹட்டன் ஹய்லன்ஸ் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 99.44 வீதமானவர்கள் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
அதேபோல ஏனைய பாடசாலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு பெறுபேறுகள் முன்னேற்றமடைந்துள்ளது.
கடந்த காலங்களில் நாங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம்.
வளங்கனை பெற்றுக்கொடுத்தல், ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. எனவே அதனுடைய பயன் தற்பொழுது கிடைக்கப்பபெற்றுள்ளது.
இதனைவிடவும் இன்னும் எதிர்வரும் காலங்களில் பரீட்சை பெறுபேறுகள் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் பாடசாலைகளுக்கான வழங்கள் வழங்கப்படுகின்றது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.