அடிலெயிட் மற்றும் கிங் வீதிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த இருவரும் வாகன சாரதியிடம் பயணி போல், நடித்து, இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், 20 வயதான ஆணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துப்பாக்கி சூடு உட்பட எட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது சந்தேக நபர் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும், சாரதியிடம் என்ன விதமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தொடர்பில், எவ்வித தகவலும் வெளியிடவில்லை. இதற்கிடையில், இதுதொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.