அதேபோல் தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் மூலமாக வடக்குக்கு நீரை கொண்டுசென்றால் வடக்கு மக்களின் நீண்டகால நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்