கடந்த 2016ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி, கடந்த ஆண்டு இறுதியில் இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு பெற்றன.
இத்திரைப்படத்திற்கு யு.ஏ சான்றிதழும் கிடைக்கப்பெற்ற நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படத்தின் டிரெய்லர் தயாராகி இருக்கும் நிலையில், படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
இதில், சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.