திருவனந்தபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “கேரளாவின் 20 மக்களவை தொகுதிகளில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் பெரிய வித்தியாசம் ஏதும ஏற்படப்போவதில்லை.
ராகுல் பா.ஜ.க.வை எதிர்ப்பதாக இருந்தால் பா.ஜ.க போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் இடதுசாரிகளுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்.
கேரளாவை பொருத்தவரையில் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் போட்டி என அனைவருக்கும் தெரியும். இதற்குள் பா.ஜ.க எந்தவிதத்தில் போட்டிக்கு வராது” என அவர் தெரிவித்தார்.