அனுதியின்றி இராணுவ சீருடை தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய இயக்கச்சி பகுதியிலுள்ள தையல் கடையொன்றை சோதனையிட்டபோதே இராணுவ சீருடை கண்டெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது குறித்த கடையின் முஸ்லிம் தையல் கடைக்காரர் பளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக நாடுமுழுவதும் இடம்பெற்றுவரும் திடீர் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.