ஷாருக்கானுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் 15 நிமிடம் மாத்திரமே வரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு குறைவான நேரத்தில் ஷாருக்கான் இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் அனைவரையும் கவரும் வகையில் காட்சிகள் காணப்படுவதாகவும் சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சென்னையில் இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்கு ஷாருக்கான் வந்திருந்தப்போது அவரை சென்று அட்லீ சந்தித்துள்ளார்.
குறித்த படத்தில் ஷாருக்கான் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இதன்போது ஈடுபட்டிருக்கலாமெனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.