குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பல்கலைக்கழக அவென்யூபகுதியில், நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் இது திறந்து வைக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே பலரும் அங்கு வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
மிகவும் ஆர்வமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே அங்கு வரிசைபிடித்து நின்றதாகவும், திங்கட்கிழமை காலை அளவில் அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு வரும் வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்கும், அவர்களுக்கு அங்குள்ள பொருட்கள் குறித்து விளக்கமளிப்பதற்கும் சுமார் 20 முன்னிலைப் பணியாளர்கள் அங்கு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த அந்த விற்பனை நிலையத்தில் முதலாவதாக ஒரு கிராம் அளவிலான “white widow” எனப்படும் அந்த கஞ்சாவினைப் பெற்றுக் கொண்ட பெண் கருத்து வெளியிடுகையில்,
“தான் முதலாவதாக வீட்டுக்கு சென்று கோப்பி அருந்திவிட்டு அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லவுள்ளதாகவும், அலுவலத்திலிருந்து வீடு திரும்பியதும் இதனைப் பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.