, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவர், 72மணித்தியாலங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பல பகுதிகளில், நவ்ஜோத் சிங் சித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அண்மையில் மத்திய முன்னாள் அமைச்சர் தரிக் அன்வரை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதன்போது, மோடியை வீழ்த்துவதற்கு முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு மத ரீதியாக பேசியதாக கூறி, நவ்ஜோத் சிங் சித்து மீது தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே தேர்தல் திணைக்களம், இன்று காலை 10 மணி முதல் 72 மணித்தியாலங்கள் வரை தேர்தல் பிரசாரத்தில் நவ்ஜோத் சிங் சித்து, ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.