கத்தோலிக்கர்களின் தலைமைப்பீடமான வத்திக்கான் இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்டு மெக்ஸிக்கோவில் தனித்து விடப்பட்டிருக்கும் அகதிகளுக்கு உதவும் நோக்கிலேயே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பீற்றர்ஸ் பென்ஸ் நிதியத்தினூடாக, உலகளாவிய ரீதியில் சேகரிப்பட்ட பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அகதிகளினுடைய பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்களினால் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கான முக்கியமான உதவிகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.