அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கௌதம் கம்பீர், தன்னை பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டதுடன், கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
அவர், ஏப்ரல் 25ஆம் திகதி டெல்லி ஜக்பூரா பகுதியில் அனுமதியின்றி பேரணியை மேற்கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என தேர்தல் ஆணையம் கூறியது.
உள்ளூர் தேர்தல் அதிகாரியிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.