றும் வீரர்களுக்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லையென வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பா.ஜ.க மகளிர் அணியினருக்கும் சுஷ்மா சுவராஜிக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். சுஷ்மா சுவராஜ் மேலும் கூறியுள்ளதாவது, “புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாலகோட்டில் சுய பாதுகாப்புக்காகவே இந்தியா தாக்குதல் நடத்தியது. இவ்விடயம் குறித்து சர்வதேச நாடுகளுக்கும் இந்தியா தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின், முகாம் மீது மாத்திரமே தாக்குதல் நடத்த வேண்டுமென இராணுவத்துக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய பாகிஸ்தான் மக்கள் மற்றும் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இந்திய இராணுவம் பதிலடி வழங்கியிருந்தது.
இந்த தாக்குதலை உலக நாடுகளும் ஆதரித்துள்ளன” என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில், பலாகோட்டில் இந்திய இராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் 300 முதல் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.