இந்த கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் மோகன்பாபு நடிக்கவிருந்த நிலையில் தற்பொழுது சத்தியராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
சுமார் 60 கதாப்பாத்திரங்களைக் கொண்ட இந்த நாவலில் 10 கதாப்பாத்திரங்கள் முக்கியமானவையாக காணப்படுகிறது. இந்த 10 கதாப்பாத்திரங்களுக்குமான நடிகர், நடிகைகள் இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியந்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்திரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது