பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தகுழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா மஹிந்த அமரவீர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸார் பாரிய போராட்டத்துக்கு மத்தியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்து நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தும்போது, அவர்களுக்காக எமது சட்டத்தரணிகள் முன்வந்து பிணை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
போதைப்பொருள் வியாபாரிகள் பாரியளவில் பணம்கொடுத்து சிறந்த சட்டத்தரணிகளை முற்படுத்தி இதனை மேற்கொள்கின்றனர்.
எனவே நாட்டை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகத்தினரை பாதுகாக்க சட்டத்தரணிகள் முன்வரக்கூடாது. அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க இடமளிக்கவேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.