பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார்.
இதன்போது அவர் பேசுகையில், “மக்கள் ஆசியுடன் மீண்டும் மோடி ஆட்சி அமைப்பேன் என பெருமிதத்துடன் தெரிவிக்கின்றேன். உங்கள் காவலாளியான நான் உங்களுக்காக இதுவரை நிறைவேற்றியுள்ள பணிகளால் மக்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்கள். மீதமுள்ள பணிகளையும் நானே மீண்டும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி முடிப்பேன்.
இந்திய மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன்.
இதேவேளை, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் நாட்டின் செய்தித் தொடர்பாளர்கள் போல் செயற்பட்டு வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.