மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு குமாரபுரம் சிந்தாத்திரை
முன்பள்ளி சிறார்களினால் செய்யப்பட கைப்பணி பொருட்களின் கண்காட்சி பாடசாலையில் இன்று
காட்சிப்படுத்தப்பட்டது
பாடசாலை அதிபர்
மங்களேஸ்வரி தலைமையில் சிறார்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் பாடசாலை
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன்
தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில்
காட்சிப்படுத்தப்பட்டது .
இந்த காண்காட்சி
நிகழ்வில் அதிதிகளாக அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் , மட்டிக்களி தமிழ் மகா வித்தியாலய அதிபர் சகஸ்ரநாமம் , மாநகர
சபை உறுப்பினர் ருபராஜ் , சனசமூக நிலைய உத்தியோகத்தர் அன்பழகன் குருஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் ,கிராம சேவை உத்தியோகத்தர் .,ஆரிரியர்கள் ,
பெற்றோர்கள் கலந்துகொண்டனர்
.