(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனையை சேர்ந்த சட்டத்தரணி அலியார் மரைக்கார் அப்துல் லத்தீப் அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக் கடமையாற்றி நிலையிலேயே இவர் பொது நிருவாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால்; நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நாளை(10-04-2019)தனது கடமையைப் பொறுப்பேற்கின்றார்.
1976.07.10ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர் இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்,தென்கிழக்குப் பல்கலைக்கழக வியாபார நிருவாக மானிப்பட்டதாரியும்,திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை இளமானி பட்டம் பெற்றவருமாவார்;.2006ஆம் ஆண்டு நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நிருவாக சேவை அதிகாரியானார்
2007.01.01ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக நியமனம் பெற்றார்.பின்னர் சம்மாந்துறை பிரதேச செயலகத்திலும் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியதுடன் 2015.05.22ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகக் கடமையேற்றார்.
பின்னர் 2019-01-01ஆம் திகதி நிந்தவூர் பிரதேச செயலாளராக் கடமையாற்றிய நிலையிலேயே இவர் அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல சமூக சேவை அமைப்புக்களில் அங்கம் வகித்து சமூக சேவையாற்றிவரும் இவர் மருதமுனையைச் சேர்ந்த அலியார் மரைக்கார் அவ்வா உம்மா தம்பதியின் புதல்வராவார்.